Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கு படத்தின் ரீமேக்கில் நடிக்க போட்டி? சிம்பு vs சிவகார்த்திகேயன்!

Webdunia
புதன், 15 ஏப்ரல் 2020 (15:30 IST)
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான அலா வைகுந்தபுரம்லூ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க தமிழ் நடிகர்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் தேதி சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அலா வைகுந்தபுரம்லூ. பணக்கார வீட்டில் பிறக்கும் அல்லு அர்ஜுன் விதிவசத்தால் ஏழை ஒருவரின் வீட்டுக்கு மருத்துவமனையிலே மாற்றப்பட 25 ஆண்டுகள் கழித்து தன் தாய் தந்தையரைப் பற்றி தெரிந்துகொண்டு அவர்களோடு எப்படி சேர்கிறார் என்கிற பழைய எம்ஜிஆர் படங்களின் கதைதான். ஆனால் அல்லு அர்ஜுனின் ஸ்டைலான நடிப்பாலும் பாடல்களாலும் படம் வெற்றிபெற்று இதுவரை 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை வாலு, ஸ்கெட்ச் மற்றும் சங்கத்தமிழன் ஆகிய படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்க சிம்பு நடிக்கப்போவதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது சிவகார்த்திகேயன் அந்த படத்தில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் இன்னமும் அந்த உரிமையை யாருக்கும் கொடுக்கவில்லை எனக் கூறியுள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழ் ரீமேக் உரிமைக்காக ஒரு பெரும் தொகையை கேட்பதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபூர்வ ராகங்கள் முதல் கூலி வரை.. ரஜினியின் அனைத்து படங்களையும் வெளியிட்ட சென்னை தியேட்டர்..!

படுபயங்கர க்ளாமர்.. க்யாரா அத்வானியின் பிகினி சீன் நீக்கம்!? - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, தங்கமகள் தொடர்கள் நிறைவு.. 2 தொடர்களின் நேரம் மாற்றம்..!

கர்ஜிக்கும் வசூல் வேட்டை! 150 கோடியை கடந்த மகாவதர் நரசிம்மா! அதிகரிக்கும் தியேட்டர்கள்!

அஜித் காலில் விழுந்த ஷாலினி.. வீட்டுக்கு போனதும் நான் காலில் விழனும்.. அஜித் சொன்ன காமெடி..! வைரல் வீடியோ..

அடுத்த கட்டுரையில்
Show comments