மலையாள ரீமேக் படத்தில் மீண்டும் இணையும் சிம்பு & எஸ் ஜே சூர்யா?

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (15:25 IST)
டிரைவிங் லைசன்ஸ் படத்தின் ரீமேக்கில் சிம்புவும் எஸ் ஜே சூர்யாவும் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் மலையாளத்தில் வெளியாகி பாராட்டுகளைக் குவித்த திரைப்படம் டிரைவிங் லைசன்ஸ். மறைந்த இயக்குனர் சாச்சி திரைக்கதை எழுதி பிருத்விராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் டிரைவிங் லைசன்ஸ். ஒரு உச்ச நட்சத்திரத்துக்கும் அவரின் தீவிர ரசிகரான டிராபிக் இன்ஸ்பெக்டருக்கும் இடையே ஏற்படும் மோதலே படத்தின் கதை. இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இப்போது தமிழில் இந்த படத்தை ரீமேக் செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் மலையாள படத்தின் தயாரிப்பாளர்கள் தமிழில் சிம்புவை பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனராம். மேலும் சுராஜ் கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யாவை நடிக்க வைக்கலாம் என்றும் திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஐ தொழில்நுட்பம் ரொம்ப ஆபத்தானது: நடிகை நிவேதா பெத்துராஜ்

ரீரிலீஸ் ஆகிறது கமல்ஹாசனின் ‘தேவர் மகன்’.. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்..!

இப்படி கத்திக்கிட்டே இருந்தா.. யாரு ஷோ பாப்பாங்க? - பிக்பாஸ் வீட்டாரை கிழித்தெடுத்த விஜய் சேதுபதி!

சுருள்முடி அழகி அனுபமாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

பிரியங்கா மோகனின் க்யூட் வைரல் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments