Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் இணையும் பார்த்திபன் - சிம்பு: இடியுடன் கூடிய மழை என தகவல்!

Webdunia
ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (08:35 IST)
தமிழ் திரையுலகில் நடிகர் சிம்பு கடந்த 20 ஆண்டுகளாகவும், நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் 30 ஆண்டுகளாகவும், திரையுலகில் இருந்து வந்தாலும் இருவரும் இணைந்து இன்னும் ஒரு திரைப்படத்தில் கூட நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இந்த நிலையில் விரைவில் இருவரும் இணையவிருப்பதாகவும் இந்த படம் இடியுடன் கூடிய மழையாக இருக்கலாம் என்றும் நடிகர் இயக்குனர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
விரைவில் இணையும் பார்த்திபன் - சிம்பு
இது குறித்து அவர் பதிவு செய்துள்ள ஒரு டுவீட்டில் ’சுயம்பு சிம்பு பற்றிய என் உளப்பூர்வ பாராட்டு அவருக்கு எட்ட, அன்று இரவு 8 மணிக்கு அவரின் உதவியாளர் ஒரு பூங்கொத்தும், சாக்லேட்டுமாக வந்தார். மிஸ்டர் சிம்பு தொலைபேசியில் நன்றியதில் மிஸ்டர் பண்பு ஆனார் என் எண்ணப்புத்தகத்தில். எனக்கு ஆச்சரியமா இருக்கு நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஏன் இன்னும் வொர்க் பண்ணலைன்னு என்று ஆதங்கப்பட்டார். அதாகப்பட்டது விரைவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளார்
 
இதனை அடுத்து சிம்பு மற்றும் பார்த்திபன் இணைந்து ஒரு ஆக்ஷன் திரைப்படத்தில் நடிக்க அதிக இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. நக்கலும் நையாண்டியும் ஆக நடிக்கும் பார்த்திபன் அதிரடி ஆக்ஷன் கூடிய நையாண்டியும் ஆக நடிக்கும் சிம்புவும் இணைந்தால் அந்த படம் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்யூட்டான லுக்கில் ஹாட்டான போஸ் கொடுத்த திவ்யபாரதி!

அழகுப் பதுமை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும்.. செல்வராகவனின் இன்றைய தத்துவ முத்து!

மும்பையில் முகாமிட்ட லாரன்ஸின் ‘காஞ்சனா 4’ படக்குழு!

பா ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படம் தொடங்குவதில் தாமதம்… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments