Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவின் ‘மாநாடு’ மூன்றாம் ஆண்டு தினம்.. சுரேஷ் காமாட்சியின் நெகிழ்ச்சியான பதிவு..!

Siva
திங்கள், 25 நவம்பர் 2024 (08:28 IST)
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி வெளியான நிலையில் இன்று மூன்றாவது ஆண்டு தினம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்திருப்பதாவது:
 
மாநாடு வெளியாகி 3 வது ஆண்டு. மாநாடு படத்தின் வெற்றி,  அடையாளமாக நிறைய மாற்றங்களை உருவாக்கியது. 
 
தடைகள் தாண்டிய படம் பல நல்ல நிகழ்வுகளை தமிழ்சினிமாவிற்கு தந்தது. கொரோனாவிற்குப் பிறகு மக்களை திரையரங்கிற்கு கூட்டங் கூட்டமாக வரவைத்தது. ரிப்பீட் மோடில் படம் பார்க்க வைத்தது, விநியோகஸ்தர்கள்... திரையரங்குகளின் ஓனர்கள் என யாவரின் முகத்திலும் மகிழ்ச்சியைக் கொண்டுவந்தது... இளவல் சிம்பு .. எனக்கு... இயக்குநர் வெங்கட் பிரபு... தொழில் நுட்பக் கலைஞர்கள் என எல்லோருக்கும் வாழ்க்கையின் ஏற்றத்தையும்.. மாற்றத்தையும் தந்த படம். 
 
மாபெரும் வெற்றியைப் பெற உடன் நின்ற சிம்பு, இயக்குநர் வெங்கட் பிரபு, மேஸ்ட்ரோ மாஸ்டர்  யுவன்,  ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன், எடிட்டர் பிரவீண் கே எல், ஸ்டண்ட் சில்வா மாஸ்டர், கல்யாணி பிரியதர்ஷன் உட்பட அனைத்து நடிகர் நடிகைகள் தொழில் நுட்பக்கலைஞர்கள்..  தயாரிப்பு வடிவமைப்பு செய்த நண்பர் உமேஷ் குமார், அலுவலகத்தில் பணியாற்றியவர்கள்.. நண்பர்கள்.. உறுதுணையாக நின்ற தயாரிப்பாளர்கள்.. பத்திரிகையாளர்கள் மற்றும் சிம்புவின் பேரன்பு ரசிகர்கள் ரசிகைகள் அனைவருக்கும் இந்த மூன்றாம் ஆண்டு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேரன்பும்.. பெரும் நன்றிகளும்! 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐஸ்வர்யா லஷ்மியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கேரளா புடவையில் அம்சமான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் டிரைலரில் விஜயகாந்த்.. ரமணா ரெஃபரன்ஸ்..!

என் மனைவிக்கு இறந்ததற்கு அல்லு அர்ஜுன் காரணம் இல்லை… இறந்த பெண்ணின் கனவர் கருத்து!

இறந்தவர் குடும்பத்துக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன்… ஜாமீனில் வெளிவந்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments