Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் குத்தாட்டம் போடும் ஓவியா

சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் குத்தாட்டம் போடும் ஓவியா
, திங்கள், 19 ஜூன் 2017 (17:25 IST)
தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. கேரளத்தை சேர்ந்த இவர் சுந்தர்.சியின் கலகலப்பு படத்தில் நடித்ததின் மூலம் கவர்ச்சி நாயகி ஆனார். பின்னர் இவர் நடித்த படங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை. எனவே கிடைக்கும் வேடத்தில் நடிக்க முன்வந்திருக்கிறார்.

 
விஷ்ணு விஷால் நடிக்கும் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தில் ரெஜினா நாயகியாக நடிக்கிறார். இதில் ஒரு சில காட்சிகளில்  மட்டும் வருகிறாராம். மேலும் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் வேற ஆடப்போகிறாராம். இயக்குனர் எழிலின் உதவியாளர் செல்வா  இயக்கும் இந்த படத்தில் ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன், யோகிபாபு, மன்சூர்அலிகான், சிங்கமுத்து உள்பட பலர் நடிக்கிறார்கள்.
 
தற்போது அருள்நிதி நடிக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராகவும் நடிக்கிறார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் மகளுக்கு நடிக்கும் பிழைப்பு எதற்கு? புலம்பும் பாலிவுட் நடிகர்