Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கையில பேட்.. அழுக்கு வேட்டி.. மாஸ் காட்டும் சிம்பு! – விரைவில் இருக்குது ட்ரீட்!

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (12:43 IST)
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள புதிய படத்தின் மோஷன் போஸ்டர் அப்டேட் பற்றி சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில காலமாக திரைப்படங்கள் எதுவும் வெளியிடாமல், ஒப்பந்த படங்களையும் முடித்து கொடுக்காமல் இருந்த சிம்பு தற்போது தொடர்ச்சியாக படபிடிப்பு பணிகளில் இறங்கியுள்ளார். வெங்கட் பிரபுவின் “மாநாடு” படம் சில பிரச்சினைகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது இயக்குனர் சுசீந்திரனுடன் புதிய படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

”வெண்ணிலா கபடி குழு” படத்தின் மூலம் கிராமத்து கபாடி போட்டிகளை பொதுவெளிக்கு காட்டிய இயக்குனர் சுசீந்திரன் இந்த படத்தில் தெரு கிரிக்கெட் போட்டிகளை சாராம்சமாக கொண்ட கதையை எடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கு ஏற்றாற்போல கிரிக்கெட் மட்டை. அழுக்கு வேட்டியுடன் மைதானத்திற்குள் நுழைவது போன்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.

பெயரிடப்படாத இந்த படத்தின் அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டர் அக்டோபர் 26 அன்று சரியாக 12.12 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அன்னை இல்லம் எனக்கு சொந்தமான வீடு – ஜப்திக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த பிரபு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments