ஜூன் 30 மற்றும் ஜூலை 1ஆம் தேதி அபுதாபியில் மிக பிரமாண்டமாக சைமா விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னட மற்றும் மலையாள திரையுலகினர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
சைமா விருது பெற்ற தமிழ் நட்சத்திரங்கள் யார் யார் என்று பார்ப்போமா?
சிறந்த நடிகர்: சிவகார்த்திகேயன் (ரெமோ)
சிறந்த நடிகை: நயன்தாரா (இருமுகன்)
சிறந்த துணை நடிகர்: பிரகாஷ் ராஜ் (மனிதன்)
சிறந்த துணை நடிகை: ஐஸ்வர்யா ராஜேஷ் (தர்மதுரை)
சிறந்த விமர்சகர் விருது: மாதவன் (இறுதிச்சுற்று)
சிறந்த இயக்குனர்: அட்லி (தெறி)
சிறந்த திரைப்படம்: இறுதிச்சுற்று
சிறந்த பொழுதுபோக்கு நடிகர்: விஜய்
சிறந்த அறிமுக இயக்குனர்: கார்த்திக் நரேன் (துருவங்கள் பதினாறு)
சிறந்த அறிமுக நடிகை: ரித்திகா சிங் (இறுதிச்சுற்று)
ஜெனரேஷனின் அடுத்த சூப்பர்ஸ்டார்: பேபி நைனிகா (தெறி)
நெகட்டிவ் ரோல்: த்ரிஷா (கொடி)
சிறந்த காமெடியன்: யோகி பாபு (ஆண்டவன் கட்டளை)
சிறந்த பாடகர்: அனிருத் (ரெமோ-செஞ்சிட்டாலே)
சிறந்த பாடகி: கே.எஸ்.சித்ரா (சேதுபதி-கொஞ்சி பேசிட வேணாம்)
சிறந்த இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான் (அச்சம் என்பது மடமையடா)
சிறந்த பாடலாசிரியர்: மதன் கார்கி (மிருதன்-முன்னாள் காதலி)
நடிகை நயன்தாராவுக்கு மலையாள மொழியிலும் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. கடந்த ஆண்டும் தமிழ், மலையாளத்தில் சிறந்த நடிகை விருது பெற்ற நயன்தாரா இந்த ஆண்டு அவருக்கு அறம், இமைக்கா நொடிகள், வேலைக்காரன் உள்பட பல படங்கள் வெளியாவதால் அடுத்த ஆண்டும் அவருக்கு சைமா விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி கிடைத்தால் அவருக்கு ஹாட்ரிக் சைமா விருது கிடைக்கும் பெருமை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது