சித்தார்த், காளிதாஸ் ஜெயராம் இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.
‘பிரேமம்’ என்ற சூப்பர் டூப்பர் ஹிட்டான மலையாளப் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்ரன், தமிழில் வெளியான ‘நேரம்’ படத்தையும் இயக்கியிருந்தார். ‘பிரேமம்’ வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே தன்னுடைய அடுத்த படம் குறித்து வாய் திறந்த அல்போன்ஸ், அந்தப் படம் மியூஸிக்கல் கதையாக இருக்கும் என்று தெரிவித்தார்.
அந்தப் படத்தில் சித்தார்த் மற்றும் காளிதாஸ் ஜெயராம் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாகத் தெரிகிறது. தமிழ் மற்றும் மலையாளம் என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் இந்தப் படம் தயாராகிறது. ‘நேரம்’ படத்தின் ஒளிப்பதிவாளரான ஆனந்த் சி சந்திரன், இசையமைப்பாளரான ராஜேஷ் முருகேசன் இருவரும் இந்தப் படத்தில் பணியாற்ற உள்ளனர்.