8 தோட்டாக்கள் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ஸ்ரீகணேஷ், அந்த படத்துக்குப் பிறகு 5 ஆண்டுகள் கழித்து இயக்கிய திரைப்படம் குருதி ஆட்டம். இந்த படத்தில் அதர்வா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்த வெற்றியை இந்த திரைப்படம் பெறவில்லை.
இதனால் அவரின் அடுத்த படத்தைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து மாவீரன் படத்தைத் தயாரித்த அவர் சாந்தி டாக்கீஸ் தயாரிக்கும் சித்தார்த்தின் 40 ஆவது படத்தை அவர் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் மற்றும் சைத்ரா அச்சார் ஆகியோர் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது அந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. 3BHK என டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் ஒரு மிடில் க்ளாஸ் குடும்பம் மூன்று அறைகள் கொண்ட ஒரு தாராளமான வீட்டுக்கு செல்ல ஆசைப்படுவதும் அதை சார்ந்த பிரச்சனைகளுமே கதைக்களம் என்பதை கோடிட்டு காட்டுகிறது. 2025 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு இந்த படம் ரிலீஸாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.