Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துப்பறியும் டிராபிக் போலிஸ்… கவனத்தை ஈர்க்கும் சிபிராஜின் கபடதாரி டீசர்!

துப்பறியும் டிராபிக் போலிஸ்… கவனத்தை ஈர்க்கும் சிபிராஜின் கபடதாரி டீசர்!
, சனி, 14 நவம்பர் 2020 (08:13 IST)
நடிகர் சிபிராஜ் நடித்துள்ள கபடதாரி படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகர் சிபிராஜ் நடித்து வந்த ’கபடதாரி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கோ தனஞ்செயன் தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் டீசரை நேற்று மாலை வெளியானது. இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இந்த டீசரை டிவிட்டரில் வெளியிட்டார். டிராபிக் போலீஸாக பணியாற்றும் சிபிராஜ் ஒரு கொலை குறித்த விசாரணையில் ஈடுபட்டு அதை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதை என்பது போல அமைந்துள்ளது டிரைலர். நீண்ட நாட்களாக ஹிட் கொடுக்க முடியாமல் போராடி வரும் சிபிராஜுக்கு இந்த படம் திருப்பு முனையாக அமையும் என சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த சிம்புவதான் நாங்க கேட்டோம்… ஈஸ்வரன் டீசர் பார்த்து மகிழ்ச்சியான் ரசிகர்கள்!