Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள ஸ்ருதி ஹாசன்

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள ஸ்ருதி ஹாசன்
, வெள்ளி, 22 ஜூன் 2018 (13:42 IST)
நடிகை, பின்னணிப் பாடகி, இசையமைப்பாளர் என்பதைத் தொடர்ந்து தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.
தனது சொந்த நிறுவனமான இஸிட்ரோ மீடியா சார்பில் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி ’என்ற படத்தை தயாரித்து வெளியிடுகிறார் நடிகை ஸ்ருதிஹாசன். இதனை  ‘லென்ஸ்’ பட புகழ் இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார்.‘லென்ஸ்’ படத்தின் மூலம் சர்வதேச அளவில் ஏராளமான  பார்வையாளர்களின் கவனம் ஈர்த்தவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், அத்துடன் இவரது படத்தைப் பார்த்த அனைவரும் இவரின் கதை சொல்லும் பாணியை வெகுவாக ரசித்து பாராட்டினர். அதிலும் குறைவான கதாப்பாத்திரங்களை வைத்துக் கொண்டு, தேவையான கருவிகளின் உதவியை மட்டும் பயன்படுத்திக்  கொண்டு, எளிமையான பாணியில் கதையை சொல்வதில் தேர்ச்சிப் பெற்றவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். இவரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு திரை  ஆர்வலர்களிடத்திலும், ரசிகர்களிடத்திலும் ஏற்பட்டிருந்தது. இந்த படத்திலும் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், குறைவான கதாப்பாத்திரங்களைக் கொண்டு உச்சபட்ச எளிமையான கதை சொல்லும் பாணியைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாராம்.
 
இந்த படத்தின் கதை தமிழில் சொல்லப்பட்டிருந்தாலும்  உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் புரிந்துகொள்ளப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் வகையிலேயே இது  படமாக்கப்படவிருக்கிறது. ஏனெனில் திரைக்கதை, வசனம் மற்றும் குறைந்த பட்ச தொழில்நுட்ப கருவிகளால் ஒரு உண்மையான காட்சியை திரையில்  பிரதிபலிக்க முடிவதில்லை.
 
இந்நிலையில் படத்தைப் பற்றி இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் பேசும் போது,‘ உலகம் முழுவதிலுமுள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள்,தாங்கள் உருவாக்கும் கலை படைப்பை முடிந்தவரை பார்வையாளர்களுக்கு உண்மைக்கு அணுக்கமாக இருக்கும் வகையில் உருவாக்குவதற்காகத்தான் கடினமாக  போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’, உண்மையான வாழ்க்கை மற்றும் அதன் உண்மையான நேர விவரத்துடன்  கூடிய விவரிப்பாக தயாராகவிருக்கிறது. இதில் நான்கு நண்பர்களின் கதையின் மூலம்  இந்த சமூகம் எப்படி பழங்கால மரபுகளின் வீழ்ச்சியையும், நவீனத்தின்  எழுச்சியையும் எதிர்கொள்கிறது என்பதை தங்களுக்குள்ளேயே ஒரு விசாரணையின் மூலம் விவாதித்துக் கொள்கிறது. அதாவது திரைக்கதை, வசனங்கள்  இல்லாமல் சிறிய வழி உரையாடலுடன் கூடிய அடிப்படை யோசனையைப் பற்றிய படமாக படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் தயாரிப்பின் போது, ஒரு படைப்பாளியின் சுதந்திரமான தன்னிச்சையான அதிகாரத்தை உணர முடிந்தது. இதனால் சிறிய தருணங்கள் கூட உண்மையுடன் கூடிய உயிர்ப்புள்ளதாக்கியது’  என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய்யின் சினிமா பயணம் ஒரு பார்வை