Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்கூல் படிக்கும் போது ஸ்ருதி ஹாசன் எப்படி இருந்திருக்காங்க பாருங்க - வைரல் புகைப்படம்!

ஸ்கூல் படிக்கும் போது ஸ்ருதி ஹாசன் எப்படி இருந்திருக்காங்க பாருங்க - வைரல் புகைப்படம்!
, சனி, 10 அக்டோபர் 2020 (10:39 IST)
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.

தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சிறு வயது முதலே தான் ஒரு பாப் பாடகர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருப்பவர். அதன் எதிரொலியாக தனது 6 வயதிலே தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் ஸ்ருதி.

webdunia

சிறிது காலம் கழித்து அம்மணிக்கு பட வாய்ப்பு குறைய ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராக மாறினார். இருந்தும், படவாய்ப்புகள் ஏதுமின்றி வந்த ஸ்ருதிஹாசன் இதற்கிடையில் காதல் வலையில் விழ சில காலம் ஜாலியாக உலா வந்துகொண்டிருந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தங்கள் காதல் முறிந்துவிட்டதாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்தார்.

webdunia

இந்நிலையில் தற்ப்போது எந்தவித டென்க்ஷனும் இன்றி சிங்கிள் பெண்ணாக ஜாலியாக சுற்றி வருகிறார். கொரோனா லாக்டவுன் சமயம் என்பதால் உடற்பயிற்சி செய்வது, பாடுவது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது  பள்ளி பருவத்தில் குழந்தையாக இருந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பழைய நியாபகங்களை நினைவு கூர்ந்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாவ்... என் கண்ணே பட்டுடும் போல - சூப்பர் கியூட் போட்டோ ஷூட் நடத்திய குட்டி ஜானு!