Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் உடலில் சிப் வைத்து எல்லோருக்கும் என்னை நிரூபிக்க முடியாது… ஸ்ருதிஹாசன் ஆவேசம்!

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (15:07 IST)
தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஸ்ருதிஹாசனை தெலுங்கு சினிமாவே மிகப்பெரிய ஸ்டார் நடிகை ஆக்கியது. தெலுங்கில் அறிமுகம் ஆனதில் இருந்தே நிறைய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடிக்கிறார். அதைத்தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா நடிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை கோபிசந்த் மாலினேனி இயக்குகிறார். ஏற்கனவே சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சலார் படத்தில் தன்னுடைய காட்சிகளை நிறைவு செய்ததாக அறிவித்தார்.

3 படத்தில் நடித்த போது ஸ்ருதிக்கும், தனுஷுக்கும் இடையே காதல் மலர்ந்து ஒன்றாக இருவரும் சுற்றியதாக வதந்திகள் பரவின. அதுபற்றி விளக்கம் அளித்துள்ள ஸ்ருதிஹாசன் “என்னை நம்பி தனுஷ் எனக்கு வாய்ப்பளித்தார். என்னை சுற்றி 10000 வதந்திகள் உலவுகின்றன. அதையெல்லாவற்றையும் என் உடலில் சிப் வைத்து நிரூபித்துக் கொண்டிருக்க முடியாது.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பத்திக்கிச்சு.. நம்பிக்கை விடாமுயற்சி..! - வைப் மோடுக்கு கொண்டு சென்ற அனிருத்! - Pathikichu Lyric!

நடிகர் சயிஃப் அலிகானை குத்தியவரை வளைத்து பிடித்த போலீஸ்! சத்தீஸ்கரில் சிக்கியது எப்படி?

வெள்ளை நிற சேலையில் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் க்ளிக்ஸ்!

வேள்பாரி வரவே வராது… ஷங்கரை நம்பி அவ்வளவு காசு யாரும் போடமாட்டார்கள்… பிரபலம் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments