தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஸ்ருதிஹாசனை நடிகையாக அறிமுகப்படுத்தியது இந்தி சினிமாதான். கிக் என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர், அதன் பின்னர் தமிழில் ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் தெலுங்கு சினிமாவே மிகப்பெரிய ஸ்டார் நடிகை ஆக்கியது. தெலுங்கில் அறிமுகம் ஆனதில் இருந்தே நிறைய படங்களில் முன்னணி நடிகர்களோடு நடித்து ஸ்டார் நடிகையாக வலம் வருகிறார்.
தற்போது அவர் கைவசம் தமிழில் ட்ரெய்ன் என்ற படம் மட்டுமே உள்ளது. அதிலும் அவர் ஒரு கௌரவ வேடத்திலேயே நடித்து வருகிறார். தெலுங்கில் அவரிடம் சலார் 2 உள்ளிட்ட படங்கள் உள்ளன. இந்நிலையில் அவர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி வரும் விமர்சனங்கள் குறித்துப் பேசியுள்ளார்.
அதில் “நம் எல்லோருக்கும் விரும்பத் தகாத வகையிலான ஒரு முன்னாள் காதல் இருந்திருக்கும். என்னிடம் யாராவது “இது உங்களின் எத்தனையாவது காதல் என்று கேட்டால் நான் வருந்துவதில்லை. ஏனென்றால் அது அவர்களுக்கு வெறும் எண்ணிக்கை. ஆனால் எனக்கு நான் விரும்பும் என் காதலைப் பெறுவதற்கான முயற்சிகள் அவை. அதனால் அவர்களின் கேள்வியால் நான் காயமடைவதில்லை. ஆனால் ஒரு மனுஷியாக எனக்கு சிறு வருத்தம் உண்டு” எனக் கூறியுள்ளார்.