கூலி படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு என்ன வேடம்?... வெளியான தகவல்!

vinoth
சனி, 20 ஜூலை 2024 (16:31 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், பஹத் பாசில், ஸ்ருதிஹாசன் ஆகியோர் இதுவரை ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படும் நிலையில் பாலிவுட் மற்றும் டோலிவுட் நடிகர்கள் சிலரும் படத்தில் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் பஹத் பாசிலும் ஒருவராக இருப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர் இப்போது வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு வேடத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் அவர் ரஜினிக்கு மகளாக இந்த படத்தில் நடிக்கிறார். அவருக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் இடையில் உணர்ச்சிப்பூர்வமானக் காட்சிகள் படத்தில் முக்கியத்துவம் பெறும் என சொல்லப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரம்முக்கு ஹீரோயின் ஆகும் மீனாட்சி சௌத்ரி… வில்லனாக சத்யராஜ்!

ஜெயிலர் 2 படத்தில் இணைந்தாரா சந்தானம்?... இணையத்தில் பரவும் தகவல்!

உன்னை அடிச்சுப் போட்டுட்டு பிக்பாஸ விட்டு போயிடுவேன்! தர்பீஸ் மேல் பாய்ந்த FJ! Biggboss Season 9

நீல நிற சேலையில் ஜொலிக்கும் சமந்தா… வாவ் க்ளிக்ஸ்!

வித்தியாசமான டிசைனர் ஆடையில் அசத்தல் போஸ் கொடுத்த ஸ்ரேயா!

அடுத்த கட்டுரையில்
Show comments