Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்ரத்தா நடிக்கும் கலியுகம் – பூஜையுடன் ஆரம்பம்!

ஸ்ரத்தா நடிக்கும் கலியுகம் – பூஜையுடன் ஆரம்பம்!
, வியாழன், 21 ஜனவரி 2021 (17:11 IST)
நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் கலியுகம் படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது.

நேர்கொண்ட பார்வை மற்றும் ஜெர்ஸி ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையான ஸ்ரத்தா ஸ்ரீநாத் இப்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் உருவான மாறா திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றது.

இந்நிலையில் இப்போது அவர் நடிக்கும் கலியுகம் எனும் படத்தின் பூஜை நடந்துள்ளது. விளம்பரப் படங்களை இயக்கியுள்ள பிரமோத் சுந்தர் இயக்கவுள்ள இந்தப் படத்தில் ஸ்ரத்தா மையக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஆர்.கே இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ப்ரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.எஸ். ராமகிருஷ்ணா. ஸ்ரத்தாவைத் தவிர அனைவரும் புதுமுகங்களாக இந்த படத்தில் நடிக்க உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏன் சினிமாவை விட்டு ஒதுங்கினேன் – சாக்லேட் பாய் ஹீரோ பதில்!