எனக்கு திருமணமா ? பிக் பாஸ் புகழ் ஜூலி டுவிட்டரில் காட்டம்!

சனி, 1 ஆகஸ்ட் 2020 (16:09 IST)
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார். முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை நெட்டிசன்கள். பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பிறகு விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார்.

அதற்கு ஏற்றார் போல ஜூலியும் இடைவிடாமல் அடுத்தடுத்து கன்டென்ட் கொடுத்துக்கொண்டு தான் வருகிறார். தன்னை கிண்டல் செய்பவர்களுக்கு பெரிதாக ரியாக்ட் செய்யாவிட்டாலும் சில சமயம் கடுப்பாகி நெத்தியடி பதில் கொடுத்து கிண்டல் செய்பவர்களின் மூக்கை உடைப்பார். ட்விட்டரில் அவர் என்ன கருத்து சொன்னாலும் நெட்டிசன்ஸ் கண்டம் செய்துவிடுவதால் அந்த பக்கம் தலையே காட்டுவதில்லை ஜூலி.

இந்நிலையில் ஜூலிக்கும், பிரபல தொழில் அதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் என்று தகவல் வெளியாகி தீயாக பரவி வருகிறது.

இந்தச் செய்தி போலியானது என்று ஜூலி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் என் பெயரைக் கெடுக்க நினைப்பவர்களைப் பார்த்தால் கேவலமாக இருக்கிறது. எனக்கு திருமணம் என்று செய்தி வெளியாவது போலியனது என்று திட்டமாக தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஹாட்டி... கியூட்டி... பியூட்டி - மேஜிக் பார்வையால் ரசிகர்களை வசீயம் செய்யும் பார்வதி நாயர்!