Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கன்னட நடிகை அனு கவுடா மீது தாக்குதல்...

Advertiesment
anu gouda
, புதன், 5 ஜூலை 2023 (18:45 IST)
கன்னட நடிகை அனு கவுடா மீது நிலத் தகராறு காரணமாக  தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட சினிமாவின் பிரபல நடிகை அனு கவுடா.  இவர், சிஷ்யா, ஹூடுகரு, குரு, பஜ்ரங்கிகெம்பேகவுடா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  இவரது சொந்த ஊர் ஷிவமொகாவின் ஒசநகர்.  இவர் பெயரில் சாகர் தாலூகா கஸ்பாடி என்ற கிராமத்தில்  2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை இவரது பெற்ரோர் கனித்து வருகின்றனர்.  இந்த நிலையில், இவரது பெற்றோரிடம்  நீலம்மா, மோகன் ஆகியோர் நிலத்தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது, நடிகை அனு கவுடா,  நீலம்மா, மோகன் ஆகிய இருவரிடம்  இதுபற்றி கேட்டுள்ளார்.

அவர்கள் இருவரும் அவரை தாக்கியுள்ளனர். இதில், அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டது.  தற்போது சாகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விளம்பரத்தில் நடிக்க ராஜமெளலிக்கு பல கோடி சம்பளம்!