கமல்ஹாசன், விஜய்சேதுபதி நடித்து வரும் விக்ரம் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் பிக்பாஸ் ஷிவானி, மீண்டும் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இந்த படத்தின் நாயகியாக ஷிவானி நாராயணன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
 
									
										
			        							
								
																	
	 
	இது குறித்த தகவலை புகைப்படத்துடன் ஷிவானி நாராயணன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இயக்குநர் பொன்ராமுடன் ஷிவானி நாராயணன் எடுத்த இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	 
	விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விக்ரம் படத்தில் நடித்து வரும் நிலையில் மீண்டும் அவருக்கு ஜோடியாக நடிக்க ஷிவானி நாராயணன் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது