Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழில் வெளியாகிறது சிவாஜி – மோகன்லால் படம்

தமிழில் வெளியாகிறது சிவாஜி – மோகன்லால் படம்
, வியாழன், 4 மே 2017 (16:33 IST)
சிவாஜி கணேசனும், மோகன்லாலும் இணைந்து நடித்த மலையாளப் படத்தை, தமிழில் டப் செய்து வெளியிடுகின்றனர்.


 
 
சிவாஜி கணேசன் – மோகன்லால் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளியான மலையாளப் படம் ‘ஒரு யாத்ரமொழி’. இந்தப் படத்துக்கு இயக்குநர் பிரியதர்ஷன் கதை எழுத, பிரதாப் போத்தன் இயக்கியிருந்தார். நாயகியாக ரஞ்சிதா நடித்திருந்தார். பிரகாஷ் ராஜ், முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
 
20 வருடங்களுக்குப் பிறகு, இந்தப் படத்தை தமிழில் டப் செய்து வெளியிடப் போகின்றனர். அத்துடன், தற்போதைய டெக்னாலஜிக்கு ஏற்றபடி சவுண்ட், டிஐ, கலர் கரெக்‌ஷன் ஆகியவற்றையும் செய்யப் போகின்றனர். இந்தப் படத்துக்கு ‘பயணத்தின் மொழி’ என தலைப்பு வைத்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுமங்கலி சீரியல் நடிகரின் தற்கொலைக்கு இதுதான் காரணமா?