Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி 20 போட்டிகளில் இந்த மாற்றங்கள் தேவை… ஷேன் வார்னின் ஆலோசனைகள்!

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2020 (16:37 IST)
டி 20 போட்டிகள் பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே சாதகமாக அமைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள வேளையில் அது குறித்து ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்ன் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

டி 20 போட்டிகளின் அசுர வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக அமைவது சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக பந்துகள் பறப்பதுதான். அதனால் மைதானங்களை வடிவமைக்கும் போதே பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றார் போல வடிவமைக்கப்படுகிறது. மைதானத்தின் எல்லைகளை குறைப்பது மற்றும் புற்களின் அளவை குறைப்பது என வடிவமைக்கப்படுகின்றன.

இதனால் போட்டிகள் அனைத்தும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைகின்றன என்ற குற்றச்சாட்டு எழுகிறது. இந்நிலையில் ஆஸியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்ன் சில ஆலோசனைகளைக் கூறியுள்ளார்.

1. பவுண்டரிகளின் அளவு பெரிதாக இருக்கவேண்டும். சிறிய மைதானங்களில் அதிக புற்கள் இருக்கவேண்டும்.

2. பந்துவீச்சாளர்கள் அதிகபட்சமாக ஐந்து ஓவர்கள் வீசவேண்டும்.

3. பேட்ஸ்மேனுக்குச் சாதகமாக ஆடுகளம் இருக்கக் கூடாது. டெஸ்ட் ஆட்டத்தின் 4-ம் நாள் ஆடுகளம் போல இருக்கவேண்டும். அப்போதுதான் பேட்ஸ்மேனுக்கும் பவுலருக்கும் இடையே போட்டியிருக்கும்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருப்பு நிற ட்ரஸ்ஸில் ரகுல் ப்ரீத் சிங்கின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

சூர்யா 44 படம் எப்போது ரிலீஸ்?… கார்த்திக் சுப்பராஜ் கொடுத்த அப்டேட்!

கங்குவா தோல்விக்கு இவருதான் முக்கியக் காரணம்… கொந்தளிக்கும் ரசிகர்கள்!

ராஜமௌலியின் ஹிட் கதையை பட்டி டிங்கரிங் செய்யும் அட்லி…அடுத்த படம் பற்றி வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments