Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்ன கண்றாவி ஜாக்கெட்டுடா இது! நெட்டிஸன்களிடன் அடிவாங்கும் பிரபல நடிகை

Advertiesment
, வியாழன், 30 மார்ச் 2017 (22:58 IST)
சினிமா விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகைகள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு கவர்ச்சி உடையில் வலம் வருவது என்பது தற்போது வெகு சகஜமாகிவிட்டது. அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த IIFA விருது வழங்கும் விழாவில் தென்னிந்திய நடிகைகளின் கவர்ச்சி உடைகள் பெரும் கவனத்தை ஈர்த்தன.



 


குறிப்பாக  நடிகைகள் வரலட்சுமி, ராதிகா, ராகுல் ப்ரீட் சிங், இசா குப்தா, ரித்திகா சிங், சாயிஷா சைகல், சினேகா, ஆகியோர்களின் உடைகள் பெரிதும் பேசப்பட்டன.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீவஸ்டாவா உடை முற்றிலும் வித்தியாசமாக இருந்தது.  சேலையில், வித்தியாசமான ஜாக்கெட் அணிந்து வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் ஸ்ரீவஸ்டாவா. இவர் அணிந்த ஊதா நிற சேலையும், முழுமுதுகும் தெரியும் படி அணிந்திருந்த ஜாக்கெட்டும் பலரை அதிர்ச்சியடையவும், சிலருக்கு கண்களுக்கு குளிர்ச்சியாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் வாயை மென்று கொண்டிருந்த நெட்டிஸன்களுக்கு இது போதாதா? ஸ்ரீவஸ்டாவின் உடை பயங்கரமாக நெட்டிஸன்களிடம் அடி வாங்கி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நகைக்கடை அதிபர் கொடுக்கும் வரதட்சணை. அசந்து போன அனிருத்