Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேம் சேஞ்சர் படத்தின் அடுத்த அப்டேட்டைக் கொடுத்த இயக்குனர் ஷங்கர்!

கேம் சேஞ்சர் படத்தின் அடுத்த அப்டேட்டைக் கொடுத்த இயக்குனர் ஷங்கர்!
, புதன், 12 ஜூலை 2023 (08:59 IST)
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராம்சரண். சமீபத்தில் இவர் நடித்து வெளியான RRR திரைப்படம் உலக அளவில் பிரபலமான நிலையில், ராம்சரணின் அடுத்த படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்க படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார்.

கேம் சேஞ்சர் என பெயரிடப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் பல மாதங்களாக விட்டு விட்டு நடந்து வருகிறது. இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கிலும் பிஸியாக இருப்பதே இந்த படத்தின் தாமதத்துக்குக் காரணம்.

இந்நிலையில் இப்போது இந்தியன் 2 காட்சிகளை பெரும்பாலும் முடித்துள்ள ஷங்கர் கேம் சேஞ்சர் ஷூட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். படத்தில் இடம்பெற்ற பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சி ஒன்றை இப்போது படமாக்கி வருவதாக சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பசுபதி நடித்த தண்டட்டி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!