Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் 2 படத்தின் VFX பணிகளில் இயக்குனர் ஷங்கர்… லேட்டஸ்ட் புகைப்படம்!

Webdunia
திங்கள், 24 ஜூலை 2023 (09:59 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகளின் மேற்பார்வையிடும் புகைப்படத்தை இயக்குனர் ஷங்கர் தற்போது வெளியிட்டுள்ளார். படத்தில் வி எஃப் எக்ஸ் காட்சிகள் அதிகளவில் இடம்பெறுவதாகவும், அதற்காக அதிக மெனக்கடல்கள் செய்யப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனோடு, எஸ் ஜே சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments