Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல மணிநேரம் உருவாகியுள்ள இந்தியன் 2… ஷங்கர் போடும் புது திட்டம்!

பல மணிநேரம் உருவாகியுள்ள இந்தியன் 2… ஷங்கர் போடும் புது திட்டம்!
, திங்கள், 24 ஜூலை 2023 (07:24 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படம் பல ஆண்டுகளாக இடைவெளி விட்டு இடைவெளி விட்டு ஷூட்டிங் செய்யப்பட்டதால் திரைக்கதையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு ஷூட் செய்யப்பட்டுள்ளது. இதனால் இப்போது வரை படம் 6 மணி நேரம் ஓடும் புட்டேஜாக உருவாகியுள்ளதாம்.

அதனால் படத்தை இரண்டு பாகங்களாக பிரித்து விடலாமா என ஷங்கர் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதனால் இந்தியன் 3 வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிரட்டும் 2 நிமிட ‘கங்குவா’ கிளிம்ப்ஸ் வீடியோ.. செம உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்..!