Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஷங்கர் ராம்சரண் பட ரிலீஸ் பற்றி வெளியான தகவல்!

ஷங்கர் ராம்சரண் பட ரிலீஸ் பற்றி வெளியான தகவல்!
, வியாழன், 2 டிசம்பர் 2021 (11:12 IST)
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படம் பிப்ரவரி மாதம் 2023 ல் தான் வெளியாகும் என தெரிகிறது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்கிறார்.

படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஷங்கர் படத்தின் படப்பிடிப்புக்காக புனேவில் பிரம்மாண்டமாக 10 கோடி ரூபாய் செலவில் ஒரு அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சில சண்டைக் காட்சிகள் மற்றும் கியாரா அத்வானி மற்றும் ராம்சரண் மோதும் காட்சிகளை படமாக்கி வருகிறார்.

ராம் சரண் தேஜா நடிப்பில் அடுத்து ஆர் ஆர் ஆர் படம் வெளியாக உள்ளதால் அவரின் அடுத்த படத்துக்கு இந்தியா முழுவதும் பிஸ்னஸ் நடக்கும் என்பதால் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பாளர் தில் ராஜுவிடம் இருந்து 350 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள பட்ஜெட் 170 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது வேகமாக நடந்து வந்தாலும் ரிலிஸ் என்னவோ 2023 ஆம் ஆண்டு பிப்ரவ்ரி மாதம்தான் என படக்குழு சார்ந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொம்மை கண்ணாடியில் ஸ்டைலா போஸ் கொடுத்த ரம்யா நம்பீசன் - மாடர்ன் கிளிக்ஸ்!