Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஷங்கர் ராம்சரண் படத்தின் ஜாபிலம்மா பாடல் இணையத்தில் லீக்!

Advertiesment
Ramcharan
, திங்கள், 18 செப்டம்பர் 2023 (10:59 IST)
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராம்சரண். சமீபத்தில் இவர் நடித்து வெளியான RRR திரைப்படம் உலக அளவில் பிரபலமான நிலையில், ராம்சரணின் அடுத்த படமான கேம்சேஞ்சர் படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்க தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் பல மாதங்களாக விட்டு விட்டு நடந்து வருகிறது. இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கிலும் பிஸியாக இருப்பதே இந்த படத்தின் தாமதத்துக்குக் காரணம். இந்த படத்தின் 5 பாடல்களுக்காக மட்டும் சுமார் 90 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஜாபிலம்மா என்ற பாடல் இணையத்தில் தற்போது லீக் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ விரைவில் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாரா நடிக்கும் மண்ணாங்கட்டி… டைட்டிலோடு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!