Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோசமான விமர்சனங்களை அடுத்து 20 நிமிடத்தைக் குறைக்கும் முடிவில் இந்தியன் 2 படக்குழு!

மோசமான விமர்சனங்களை அடுத்து 20 நிமிடத்தைக் குறைக்கும் முடிவில் இந்தியன் 2 படக்குழு!

vinoth

, திங்கள், 15 ஜூலை 2024 (07:30 IST)
கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படம் உலகெங்கும் 5000க்கும் மேற்பட்ட திரைகளில் நேற்று ரிலீஸானது.

இந்நிலையில் படம் ரிலீஸானதில் இருந்து படத்துக்குக் கலவையான விமர்சனங்களேக் கிடைத்து வருகின்றன.  முதல் பாகத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த வசனம், திரைக்கதை மேக்கப் மற்றும் நடிப்பு என எதுவும் இரண்டாம் பாகத்தில் ரசிகர்களைக் கவரவில்லை. ஆனாலும் படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.

படம் பார்த்த திரையுலகப் பிரபலங்கள் பலரும் சம்பிரதாயமாக படத்தைப் பாராட்டி வரும் நிலையில் படத்தின் மீதான ட்ரோல்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்நிலையில் படத்தின் நீளம் ஒரு பெரிய குறையாக சொல்லப்படும் நிலையில் இப்போது படத்தில் இருந்து 20 நிமிடத்தைக் குறைத்துவிடலாம் என்ற முடிவில் இயக்குனர் ஷங்கர் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒருவழியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பிருத்விராஜின் ஆடுஜீவிதம் திரைப்படம்!