ஷங்கர் - விக்ரம் திடீர் சந்திப்பு.. ‘அந்நியன் 2’ அல்லது ‘ஐ 2’ உருவாகிறதா?

Siva
திங்கள், 30 ஜூன் 2025 (18:40 IST)
இயக்குநர் ஷங்கர் மற்றும் நடிகர் விக்ரம் இருவரும் எதிர்பாராதவிதமாக சந்தித்தது, தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பு, இருவரும் இணைந்து ஒரு புதிய பட உருவாக்கத்திற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
 
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு 'அந்நியன்' திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதேபோல், பத்து ஆண்டுகள் கழித்து, 2015 ஆம் ஆண்டு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் 'ஐ' என்ற திரைப்படம் உருவானது. 
தற்போது, மீண்டும் பத்து ஆண்டுகள் கழித்து இருவரும் சந்தித்துள்ள நிலையில், 'அந்நியன்' அல்லது 'ஐ' படங்களில் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இது குறித்த பேச்சுவார்த்தைதான் இந்த சந்திப்பின்போது நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
'இந்தியன் 2' மற்றும் 'கேம் சேஞ்சர்' படங்களுக்கு பிறகு, ஷங்கர் 'இந்தியன் 3' படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கமல்ஹாசன் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருப்பதாலும், தயாரிப்பு நிறுவனம் 'இந்தியன் 3' படத்தின் மீது அக்கறை காட்டாததாலும், ஷங்கர் அடுத்த படத்திற்கு நகர போகிறார் என்றும், அநேகமாக விக்ரம் படத்தைத்தான் அவர் இயக்குவார் என்றும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments