Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷங்கர் இயக்கத்தில் கேஜிஎஃப் யாஷ்? 1000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட படம்!

ஷங்கர் இயக்கத்தில் கேஜிஎஃப் யாஷ்? 1000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட படம்!
, ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (08:09 IST)
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் யாஷ் ஒரு மெகா பட்ஜெட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அதோடு தற்போது ராம்சரண் தேஜா நடிக்கும் உள்ள தெலுங்கு படம் ஒன்றையும் இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இப்போது இயக்குனர் ஷங்கர் எழுத்தாளரும், மக்களவை உறுப்பினருமான சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலைப் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று படங்களின் வெற்றியை அடுத்து மறுபடியும் ஒரு வரலாற்று புனைவு திரைப்படம் உருவாக உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த படத்தில் நடிக்க உள்ளதாக சூர்யா உள்ளிட்ட பல கதாநாயகர்களின் பெயர்கள் அடிபட்டது. ஆனால் இந்த படத்தில் நடிக்க உள்ளது கே ஜி எஃப் நடிகர் யாஷ்தான் என்று இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக சமீபத்தில் ஷங்கர்- யாஷ் சந்திப்பு நடந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படப்பிடிப்புத் தளத்தில் ரஜினி ஷாருக் கான் திடீர் சந்திப்பு