Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷகீலா தினமும் குடித்துவிட்டு வந்து…. வளர்ப்பு மகள் ஷீத்தல் பகிர்ந்த தகவல்!

ஷகீலா தினமும் குடித்துவிட்டு வந்து…. வளர்ப்பு மகள் ஷீத்தல் பகிர்ந்த தகவல்!

vinoth

, திங்கள், 22 ஜனவரி 2024 (11:11 IST)
ஒருகாலத்தில் பிரபல மலையாள கதாநாயகர்களின் படங்களுக்கு இணையாக வசூலில் கொடிகட்டிப் பறந்தது ஷகிலாவின் பி கிரேட் படங்கள். மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் அவர் படங்கள் பலத்த வரவேற்பைப் பெற்றன. ஆனால் ஒரு கட்டத்தில் அங்கிருந்து விரட்டப்பட்டதாக சொல்லப்படுவதுண்டு.

அதன் பின்னர் அவருக்கு அந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. சில தமிழ்ப் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தார். குக் வித் கோமாளி என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார். அதன் பின்னர் பிரபலங்களை நேர்காணல் செய்து வரும் ஷீத்தல் என்ற திருநங்கையை வளர்ப்பு மகளாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அவர்கள் உறவில் திடீரென்று சர்ச்சை உருவாகியுள்ளது. ஷகிலாவின் வளர்ப்பு மகள் ஷீத்தல். இவரது தாய் சசி, சகோதரி ஹமீலா ஆகியோர் ஷகிலாவை தாக்கியதாகவும், சமாதானப்படுத்த சென்ற ஷகிலாவின் வழக்கறிஞர் செளந்தர்யா மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இப்போது ஷீத்தல் விளக்கமளித்துள்ளார். அதில் “ஷகீலா குடித்துவிட்டு வந்து எனது குடும்பத்தினரை தவறாகப் பேசுவார். அவர்தான் என்னை முதலில் தாக்கினார். பதிலுக்கு நான் தாக்கினேன். அவரின் வழக்கறிஞர் சமாதானம் பேச வந்த போது, என் தலைமுடியைப் பிடித்து இழுத்தார். அதனால்தான் என் அம்மா அவரை தாக்கினார்” எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல நடிகரின் படத்தில் இணைந்த எஸ் ஜே சூர்யா…!