Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இறந்ததாக செய்தி பரப்பியதற்கு நன்றி… நடிகை ஷகீலா வீடியோ!

இறந்ததாக செய்தி பரப்பியதற்கு நன்றி… நடிகை ஷகீலா வீடியோ!
, வெள்ளி, 30 ஜூலை 2021 (10:57 IST)
நடிகை ஷகீலா இறந்துவிட்டதாக செய்தி பரப்பியதை அடுத்து அதற்கு பதில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

ஒருகாலத்தில் பிரபல மலையாள கதாநாயகர்களின் படங்களுக்கு இணையாக வசூலில் கொடிகட்டிப் பறந்தது ஷகிலாவின் பி கிரேட் படங்கள். மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் அவர் படங்கள் பலத்த வரவேற்பைப் பெற்றன. ஆனால் ஒரு கட்டத்தில் அங்கிருந்து விரட்டப்பட்டதாக சொல்லப்படுவதுண்டு.

அதன் பின்னர் அவருக்கு அந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. சில தமிழ்ப் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தார். கவர்ச்சி நாயகியாக அறியப்பட்டு பல லட்சங்கள் சம்பாதித்தாலும், அதையெல்லாம் உறவினர்களிடம் நண்பர்களிடமும் பறிகொடுத்துவிட்டு இப்போது சாதாரண வாழ்க்கையைதான் அவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இப்போது விஜய் தொலைக்காட்சியில் சில  சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில் இவர் இறந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் செய்திகள் பரவின.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக ஷகீலா வெளியிட்டுள்ள வீடியோவில் ‘எல்லோருக்கும் வணக்கம், நான் இறந்துவிட்டதாக செய்திகளை அறிந்தேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன். மக்கள் என்னிட ம் காட்டும் அக்கறைக்கு நன்றி. யாரோ ஒருவர் பரப்பிய கெட்ட செய்தியால் எனக்கு நிறைய அழைப்புகள் வருகின்றன. உங்கள் அன்புக்கு நன்றி. அந்த சோகமான செய்தியைப் பரப்பிய நபருக்கும் நன்றி.’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் ஆண்டனியின் அடுத்த பட ஷூட்டிங் இங்குதான் நடக்க உள்ளதாம்!