Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் ஷாருக் கானின் பங்களிப்பு!

பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் ஷாருக் கானின் பங்களிப்பு!
, செவ்வாய், 11 அக்டோபர் 2022 (16:03 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்போது படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்ட நிலையில் 6 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டு இருந்ததும் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. படத்தில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகளை பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம்தான் செய்து கொடுத்துள்ளார்களாம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தாமதம்!