Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல ஓடிடியில் வெளியானது ஷாருக் கானின் பதான்!

Webdunia
வியாழன், 23 மார்ச் 2023 (09:20 IST)
தொடர் தோல்விகளால் தவித்து வந்த ஷாருக் கானுக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய கம்பேக்காக அமைந்தது பதான். ஷாரூக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் நடித்து சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் பதான். 4 ஆண்டுகள் இடைவெளியில் ஷாரூக்கான் நடித்துள்ள படம் என்பதால் இதன் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியான பதான் தொடர் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில் இப்போது பதான் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக வசூல் செய்த இந்தி படம் என்ற சாதனையை பாகுபலி 2 விடம் இருந்து தன்வசமாக்கியுள்ளது பதான்.

இந்நிலையில் பதான் திரைப்படம் 5 மொழிகளில் இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இந்த ஆண்டின் மிகப்பெரிய ஹிட் படமான பதானுக்கு ஓடிடியிலும் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தேவதை வம்சம் நீயோ… திஷா பதானியின் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

ரிலீஸுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே 130 கோடி ரூபாய் சம்பாதித்த நோலனின் ‘ஒடிசி’!

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்துக்கு இசையமைக்கிறாரா அனிருத்?

நடிப்பு சலிப்பை ஏற்படுத்தினால் uber ஓட்டுனர் ஆகிவிடுவேன் – ஃபஹத் பாசில் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments