Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாருக் கானின் பதான், சல்மான் கானின் டைகர்… க்ராஸ் ஓவர் ட்ரண்ட்டில் இணையும் புதுப் படம்!

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (15:26 IST)
தொடர் தோல்விகளால் தவித்து வந்த ஷாருக் கானுக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய கம்பேக்காக அமைந்தது பதான். ஷாரூக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் நடித்து சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் பதான். 4 ஆண்டுகள் இடைவெளியில் ஷாரூக்கான் நடித்துள்ள படம் என்பதால் இதன் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியான பதான் தொடர் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில் இப்போது பதான் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக வசூல் செய்த இந்தி படம் என்ற சாதனையை பாகுபலி 2 விடம் இருந்து தன்வசமாக்கியுள்ளது பதான்.

இந்நிலையில் இப்போது அதே கூட்டணியில் டைகர் vs பதான் என்ற புதிய திரைப்படத்தை உருவாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தையும் சித்தார்த் ஆனந்த் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஷாருக் கானின் பதான் போல சல்மான் கானின் டைகர் திரைப்பட வரிசையும் பாலிவுட்டில் ஹிட்டடித்த ஒன்று.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இனி திரைப்படங்கள் தயாரிக்கப் போவதில்லை என இயக்குநர் வெற்றிமாறன் அறிவிப்பு

கிளாமர் கேர்ள் யாஷிகாவின் ரீசண்ட் புகைப்படத் தொகுப்பு!

ஹோம்லி லுக்கில் க்யூட்டாக ஜொலிக்கும் மாளவிகா மோகனன்!

பாட்டு நல்லா இல்லைன்னு சொன்னதும் கேப்டன் ஷாக் ஆகிட்டாரு… ’ஆட்டமா தேரோட்டமா’ சீக்ரெட்டைப் பகிர்ந்த செல்வமணி!

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்தில் இணையும் சிரஞ்சீவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments