Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் செக்ஸி துர்கா

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2017 (11:32 IST)
கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. கடந்த 20 தேதி துவங்கிய விழா வரும் 28ம் தேதி வரை  நடைபெறுகிறது.
துவக்க விழாவில் பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி, தனது கணவர் போனி கபூர், மூத்த மகள் ஜான்வி கபூருடன் கலந்து கொண்டார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் போன்ற திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 
கோவாவில் நடைபெற்று கொண்டிருக்கும் திரைப்பட விழாவில் ‘செக்ஸி துர்கா’ படத்தை திரையிட கேரள உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. மலையாள இயக்குனர் சணல்குமார் சசிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செக்ஸி துர்கா’. இந்தப் படம் கோவாவில் நடைபெறும் ஐ.ஐ.எப்.இ. திரைப்பட விழாவில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. இந்த செய்தி  கடந்த சில நாள்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்தியன் பனோராமாவால் இந்தப் படம் தேர்வு செய்யப்பட்டு, அந்தப் பட்டியல் செய்தி ஒளிபரப்பு துறைக்கு அனுப்பி  வைக்கப்பட்டது. ஆனால், இறுதி செய்யப்பட்ட திரும்பி வந்த பட்டியலில் ‘செக்ஸி துர்கா’ மற்றும் மராத்திய படமான ‘நியூட்’  என இரண்டு படங்கள் நீக்கப்பட்டு விட்டன. இயக்குனர் சணல்குமார் சசிதரன் இதை எதிர்த்து கேரளா உயர்நீதிமன்றத்தில்  முறையிட்டார். அதனை விசாரித்த நீதிமன்றம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘செக்ஸி துர்கா’வை திரையிடுமாறு விழா குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்