Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித், விஜய்சேதுபதியை இணைக்க வைரமுத்து மகன் முயற்சி

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2019 (08:45 IST)
சமீபத்தில் வெளியான 'பேட்ட' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த விஜய்சேதுபதி அடுத்ததாக அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பான ஒரு தகவல் பரவி வருகிறது
 
கவியரசு வைரமுத்து மகன் கபிலன் வைரமுத்து தற்போது ஒரு நாவலை எழுதி வருகிறார். இந்த நாவலில் நான்கு முக்கிய கேரக்டர்கள் உள்ளதாம். இந்த நான்கு கேரக்டர்களில் அஜித், விஜய்சேதுபதி, அனுஷ்கா சர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என கபிலன் வைரமுத்து சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 
 
இந்த நாவல் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளதாகவும் நாவல் முழு வடிவம் பெற்றதும் அஜித் மற்றும் விஜய்சேதுபதியிடம் கொடுத்து படிக்க வேண்டுகோள் விடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதன்பின் காலம் கனிந்தால் இந்த படத்தில் அஜித், விஜய்சேதுபதி இணைந்து நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கபிலன் வைரமுத்து அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
 
அஜித், விஜய்சேதுபதி இருவருமே பாக்ஸ் ஆபீஸ் மன்னர்கள் என்பதால் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தின் ஓப்பனிங் குறித்து சொல்லவே தேவையில்லை. அஜித், விஜய்சேதுபதி இந்த நாவலில் நடிக்க ஒப்புக்கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஆண்ட்ரியா லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

என்னுடன் பணியாற்றிய பின்னர் அஜித்தின் ஸ்டைல் மாறியுள்ளதா?.. ஸ்டண்ட் மாஸ்டர் பெருமிதம்!

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் VJS நடிக்கும் படத்தில் இணையும் முன்னணி பாலிவுட் நடிகை!

நான் ராஜமௌலி படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி சர்ச்சையில் சிக்கிய சிரஞ்சீவி!

அடுத்த கட்டுரையில்
Show comments