Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தளபதி 68 படத்துக்காக ஐதராபாத்தில் தயாராகும் பிரம்மாண்ட செட்!

தளபதி 68 படத்துக்காக ஐதராபாத்தில் தயாராகும் பிரம்மாண்ட செட்!
, புதன், 29 நவம்பர் 2023 (07:46 IST)
லியோ படத்தை அடுத்து விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ’தளபதி 68’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

தளபதி 68 படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. இந்த படம் ஹாலிவுட்டில் 2012 ஆம் ஆண்டு வெளியான லூப்பர் என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என சொல்லப்படுகிறது. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த படத்தின் டைட்டில் ஜனவரி 1 ஆம் தேதி அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பல்வேறு வெளிநாடுகளில் இந்த படத்தின் ஷூட்டிங்கை நடத்தி வரும் படக்குழு, அடுத்து ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் முக்கியமான காட்சிகளை செட் அமைத்து படமாக்க உள்ளதாம். இதற்காக செட் உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அங்கு மொத்தம் 20 நாட்கள் ஷூட்டிங் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாடிவாசல் படத்தில் அமீரின் கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம்… வெற்றிமாறன் எடுத்த முடிவு!