Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

"என் புருஷனுடன் தான் ஜெயஸ்ரீக்கு தொடர்பு" பிளேட்டை மாத்தி போட்ட மஹாலக்ஷ்மி!

Advertiesment
, வெள்ளி, 6 டிசம்பர் 2019 (18:05 IST)
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் "தேவதையை கண்டேன்" சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் ஈஸ்வர் இவருக்கு ஜெயஸ்ரீ  என்ற மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை இருக்கின்றனர். இதற்கிடையில் ஈஸ்வர் தான் நடித்து வரும் அதே சீரியலில் வில்லியாக நடிக்கும் நடிகை மஹாலக்ஷ்மியுடன் தகாத உறவில் இருந்து வருகிறார் என்றும் தன்னையும் தன் குழந்தையையும் கொடுமை படுத்துகிறார் என்று அவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜெயஸ்ரீ  பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 
 
இந்த விவகாரம் தான் சமூக வலைத்தளங்கில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. ஜெயஸ்ரீ கொடுத்த பேட்டியில் தன் கணவர் மகலாக்ஷியுடன் தகாத உறவியில் இருந்து கொண்டு தன்னை சித்ரவதை செய்கிறார் என்றும் மேலும் தன்னிடம் விவாகரத்து கேட்டு டார்ச்சர் செய்கிறார் என்று கண்ணீருடன் கூறியுள்ளார். இதனால் மகாலக்ஷ்மியை நேரில் சென்று சந்தித்து என் கணவரை விட்டு விடு என்று கூறி கதறினாராம்.  மேலும் மகா லக்ஷ்மிக்கும் 4 வயதில் ஒரு ஆண்  குழந்தை இருக்கிறான். அவனிடம் தன்னை அப்பா என்று கூப்பிட சொல்லி ஈஸ்வர் என் முன்பே சொல்லியிருக்கிறார். 
 
இதனால் உங்கள் பிரச்சனையில் குழந்தைகளை இழுக்காதீர்கள் என்று சொன்னதற்கு " நானே அதை பற்றி கவலை படவில்லை அவளுக்கு என்னவாம்? என்று மகாலக்ஷ்மி கேட்கிறாள் என அந்த பேட்டியில் ஜெயஸ்ரீ  கூறியுள்ளார்.  அத்துடன் ,மஹாலக்ஷ்மியை பப்பு என ஈஸ்வர் முகநூலில் கொஞ்சியுள்ள ஒரு ஸ்க்ரீன் ஷாட்டும் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த விவகாரத்தால் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஈஸ்வர் மற்றும் அவரது தயார் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவரது அம்மா ஜாமினில் விடுவிக்கப்பட இரண்டு நாட்கள் கழித்து ஈஸ்வரும் வெளியில் வந்தார். 
 
webdunia
இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து முதன்முறையாக மகாலக்ஷ்மி பேட்டியளித்துள்ளார். அதாவது, என்மீது போடும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். ஈஸ்வர் எனக்கு நல்ல நண்பர் மட்டும் தான், அவரை திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை. நான் எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறும் பிரச்சனையில் உள்ளேன், அது எனது சொந்த பிரச்சனை. ஆனால் ஈஸ்வருடன் என்னை தொடர்பு படுத்தி பேசும் ஜெயஸ்ரீ, எனது கணவருக்கு நீண்டநாள் தோழியாம். இதை என்னவென்று கூறுவது என்றார். பின்னர் உங்களது கணவரை விவாகரத்து செய்ய நீதி மன்ற வழக்கு தொடர்ந்துள்ளீர் என கேட்டதற்கு அது என்னுடைய தனிப்பட்ட விஷயம், இதில் அவருக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறி பேச்சசை நிறுத்திவிட்டார் மஹாலக்ஷ்மி. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எந்த சூழ்நிலையிலும், எப்போதும் உன் கூடவே இருப்பேன்: வைரல் ஆகும் திருமண வீடியோ!