Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம்பருத்தி சீரியல் வெளியேற்றத்துக்குப் பின்… கார்த்திக்கின் முதல் பதிவு!

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (11:06 IST)
நடிகர் கார்த்திக் செம்பருத்தி சீரியல் வெளியேற்றத்துக்குப் பின் முதல்முறையாக சமுகவலைதளத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நல்ல கவனம் பெற்ற மெகா தொடர் செம்பருத்தி. இதில் கார்த்திக் ராஜ், ஷப்னம் மற்றும் பிரியா ராமன் ஆகியோர் நடித்து வந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஜி தமிழ் தொலைக்காட்சி டிவிட்டர் பக்கத்தில் ‘செம்பருத்தி தொடரின் வெற்றிக்காக கார்த்திக்கின் அர்ப்பணிப்பும் உழைப்பும் பாராட்டத்தக்கது. ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் கார்த்திக்கு பதில் வேறு ஒருவர் நடிக்க உள்ளார். ஆனால் எதிர்காலத்தில் கார்த்திக்கோடு இணைந்து ஜி தமிழ் பணியாற்றும்’ எனக் கூறியது.

இந்நிலையில் இப்போது கார்த்திக்கின் கதாபாத்திரத்துக்கு பதிலாக பிஹைண்ட்வுட்ஸ் உள்ளிட்ட இணைய சேனலில் தொகுப்பாளராக பணியாற்றிய அக்னி தேர்வு செய்யப்பட்டு நடித்து வருகிறார். இந்நிலையில் நீண்ட நாட்களாக சமூகவலைதளப் பக்கம் வராமல் இருந்த கார்த்தி நேற்று தனது முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் கமெண்ட் செய்யும் ஏராளமான ரசிகர்கள் அடுத்த சீரியல் அல்லது பட அறிவிப்பு என்ன என கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற உடையில் ரித்திகா சிங்கின் க்யூட் க்ளிக்ஸ்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

“கேம்சேஞ்சர் கதை ஏன் ஹிட்டாகவில்லை என்று…” – கார்த்திக் சுப்பராஜ் பதில்!

சிம்புவுக்கு நான் எப்போதும் ‘நோ’ சொல்ல மாட்டேன்: STR 49 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சந்தானம்..!

வேட்டையன் படத்திற்கு பின் மீண்டும் ரஜினிகாந்த் - பகத் பாசில் கூட்டணி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments