வைரத்தை போல நம்மிடமும் குறைகள் உள்ளன… என் ஜி கே ரிலீஸ் நாளில் செல்வராகவன் ட்வீட்!

Webdunia
வியாழன், 1 ஜூன் 2023 (12:28 IST)
இயக்குனர் செல்வராகவனின் சமீபத்தைய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் பெற்று வருகின்றன. இந்நிலையில் இப்போது அவர் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். இடையில் அவர் நடிகராக அறிமுகமான ‘சாணிக்காயிதம்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய திரைப்படங்கள் அவருக்குபாராட்டுகளைப் பெற்றுத்தந்தன. அடுத்து பகாசூரன் என்ற திரைப்படம் ரிலீஸாகி கணிசமான கவனத்தை ஈர்த்தது. அதற்குப் பின்னர் இன்னும் அவர் அடுத்து இயக்கும் படத்தைப் பற்றிய தகவலை தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் நேற்று அவர் இயக்கிய என் ஜி கே திரைப்படம் ரிலீஸாகி 4 ஆண்டுகள் ஆனதை அடுத்து ரசிகர்கள் ஹேஷ்டேக் உருவாக்கிக் கொண்டாடினார்கள். இந்நிலையில் நேற்று செல்வராகவன் பகிர்ந்த ட்வீட் கவனத்தை ஈர்த்துள்ளது.

அவரது ட்வீட்டில் “ பெர்பெக்‌ஷன் என்பது இல்லை. நம்மிடம் நிறைய குறைகள் உள்ளன. அது நல்லதுதான். வைரத்தை போல.” என என் ஜி கே படம் பற்றி மறைமுகமாக ட்வீட் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

SSMB29: ராஜமௌலி - மகேஷ்பாபு படத்தில் வில்லனாக பிருத்திவிராஜ்!.. போஸ்டரே டெரரா இருக்கே!..

சுந்தர்.சியின் திரையுலக பயணம்.. ரஜினி 173ல் எப்படி வொர்க் அவுட் ஆகப் போகிறது?

ஜர்னலிசத்தை சாக்கடைக்கு கொண்டு செல்கிறார்கள்! - கவுரி கிஷன் விவகாரத்தில் குஷ்பூ ஆவேசம்!

விஜய் குறித்து நான் பேட்டியில் கூறியது என்ன: அஜித்தின் விளக்க அறிக்கை..!

ரீனாவை காப்பாற்றினாரா தந்தை விஜய்? 'ஹார்ட் பீட் - 2' இணையத்தொடர் இன்றுடன் நிறைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments