Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னுடைய நிறைவேறாத ஆசைப்பற்றி ஏக்கத்தோடு பதிவிட்ட இயக்குனர் செல்வராகவன்!

vinoth
புதன், 28 பிப்ரவரி 2024 (14:24 IST)
இயக்குனர் செல்வராகவனின் சமீபத்தைய படங்களான என் ஜி கே மற்றும் நானே வருவேன் உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் பெற்று வருகின்றன. அடுத்து அவர் தன்னுடைய எவர்க்ரீன் ஹிட் படமான 7ஜி ரெயின்போ காலணி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். பைனான்ஸ் பிரச்சனை காரணமாக அந்த படம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அவர் நடிகராக அறிமுகமான ‘சாணிக்காயிதம்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய திரைப்படங்கள் அவருக்குபாராட்டுகளைப் பெற்றுத்தந்தன. அடுத்து பகாசூரன் என்ற திரைப்படம் ரிலீஸாகி கணிசமான கவனத்தை ஈர்த்தது. அதற்குப் பின்னர் தற்போது தனுஷ்  இயக்கி நடிக்கும் ராயன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் முரட்டு மீசையோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர் “நான் எப்போதுமே ஒரு போலிஸ் காரனாக விரும்பினேன். அது நடக்கவில்லை.  ஆனால் நான் எப்போதும் ஒரு போலீஸ் போன்ற தோற்றத்தில் இருக்க முடியும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்…!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தின் பட்ஜெட்டால் தயங்கும் தயாரிப்பாளர்!

கார்த்தி நடிக்கும் வா வாத்தியார் எப்போதுதான் ரிலீஸ்?… ஆமை வேகத்தில் செல்லும் இயக்குனர் நலன் குமாரசாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments