Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் படம் பார்க்கிறேன் என்பதையே மறந்துவிட்டேன்… லவ்வர் படத்தை வியந்து பாராட்டிய செல்வராகவன்!

vinoth
சனி, 17 பிப்ரவரி 2024 (11:05 IST)
கடந்த ஆண்டு மே மாதம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும்  குவித்தது. இதையடுத்து அதே தயாரிப்பு நிறுவனத்துக்கு மணிகண்டன் லவ்வர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்ட போதே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. படத்தில் டாக்ஸிக் காதலராக மணிகண்டன் நடித்திருந்தார். தன்னுடைய கேரியர், காதல் வாழ்க்கை தொடர்பான தடுமாற்றங்களில் அவர் எவ்வளவு மோசமானவராக நடந்து கொள்கிறார், அதில் இருந்து எப்படி வெளிவருகிறார் என்பதை சொல்லி இருந்தது லவ்வர் திரைப்படம். இந்த படம் இளைஞர்களைப் பெரியளவில் கவர்ந்துள்ளது.

நல்ல வசூல் செய்துவரும் லவ்வர் படத்தை இயக்குனர் செல்வராகவன் பாராட்டியுள்ளார். அதில் “லவ்வர் படம் பார்த்தேன். எனக்கு படம் பிடித்திருந்தது. இந்த தலைமுறையின் காதலைக் காட்டியிருந்தார்கள். படம் ஆரம்பித்து சில நிமிடங்களுக்குப் பிறகு நான் படம் பார்க்கிறேன் என்பதையே மறந்துவிட்டேன். மணிகண்டன், ஸ்ரீகௌரி பிரியா மற்றும் இயக்குனர் பிரபுராம் ஆகியோருக்கு பாராட்டுகள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

'பிரதர்' படத்திற்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் உடன் மீண்டும் கைகோர்க்கும் ஜெயம் ரவி!

அங்கம்மாள் படம் மும்பை திரைப்பட விழாவில் (MAMI) அதிகாரப்பூர்வமாக தேர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments