Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவரைப் பிரிந்த உங்களின் அட்வைஸ் தேவையில்லை… ரசிகரின் கமெண்ட்டுக்கு சமந்தாவின் பதில்!

vinoth
சனி, 17 பிப்ரவரி 2024 (10:56 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால்  அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இப்போது மீண்டும் நடிப்பை தொடங்கியுள்ள அவர் ‘டேக் 20’ என்ற புதிய பாட்காஸ்ட் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதில் தான் சந்தித்த உடல் நலப் பிரச்சனைகள் பற்றியும் உடல்நலத்தை பேணுவதைப் பற்றியும் பேசப்போகிறாராம். இதன் முதல் வீடியோ பிப்ரவரி 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் கீழே கமெண்ட்டில் ரசிகர் ஒருவர் “ஏன் நீங்கள் உங்கள் கணவரை பிரிந்தீர்கள்? ஒரு தோல்வியடைந்தவரிடம் இருந்து எனக்கு உடல்நல ஆலோசனை தேவையில்லை” எனக் கமெண்ட் செய்திருந்தார். அவருக்கு சம்ந்தா “நீங்கள் உங்களை வாட்டும் வெறுப்பில் இருந்து குணமாவீர்கள் என்று நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலியல் குற்றச்சாட்டு… பெண் மருத்துவர் புகார்!

மீண்டும் ஒரு பீரியட் கதையில் நடிக்கும் ரிஷப் ஷெட்டி… வெளியான அறிவிப்பு!

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்… தயாரிப்பு நிறுவனம் யார் தெரியுமா?

சூர்யாவுக்கு மட்டும் flop கொடுத்தேனா?... இயக்குனர் பாண்டிராஜ் விளக்கம்!

பிற மொழிப் படங்களை இயக்கும் போது மாற்றுத்திறனாளி போல உணர்கிறேன்… AR முருகதாஸ் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments