Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானே வருவேன் படத்தில் நடிக்கிறாரா செல்வராகவன்? போஸ்டரால் எழுந்த சந்தேகம்!

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (16:47 IST)
நானே வருவேன் படத்தின் புதிய போஸ்டர் செல்வராகவனின் பிறந்தநாளான நேற்று வெளியானது.

இயக்குநர் செல்வராகவன்,தனுஷ், யுவன்சங்கர் ராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஆகிய நால்வர் கூட்டணி புதுப்பேட்டை திரைப்படத்துக்கு பின்னர் நானே வருவேன் படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தனுஷ், யோகி பாபு மற்றும் இந்துஜா ஆகியவர்கள் சம்மந்தப்பட்ட காட்சிகளை செல்வராகவன் இயக்கி வருகிறார்.

ஏற்கனவே இரண்டு கட்டமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்து ஒரு சிறு இடைவேளை கொடுக்கப்பட்டு இருந்தது. அந்த இடைவேளையில் தனுஷ் தனது தெலுங்கு படமான வாத்தியில் கவனம் செலுத்தினார். இந்நிலையில் நேற்று இன்று நானே வருவேன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் நேற்று இயக்குனர் செல்வராகவனின் பிறந்தநாளான நேற்று படக்குழு ஒரு போஸ்டரை வெளியிட்டது. அந்த போஸ்டரில் ஒரு பக்கத்தில் தனுஷின் புகைப்படமும், மற்றொரு பக்கத்தில் செல்வராகவனின் புகைப்படமும் இடம்பெற்று இருந்தது. இந்த போஸ்டர் கவனத்தை ஈர்த்த நிலையில் செல்வராகவன் புகைப்படம் இடம்பெற்றிருந்ததால் அவரும் படத்தில் நடிக்கிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த வாரம் ஓடிடியில் எத்தனை தமிழ் படங்கள்? முழு விவரங்கள்..!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ரவிமோகன் - கார்த்தி.. நண்பர்களின் ஆன்மீக பயணம்..!

நடிகை அபிநயா திருமணம்.. இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளாமர் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments