பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படம் ரிலீசாகி 10 நாட்களில் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் நேற்று முதல் அமேசான் ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தை பார்த்த பல திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
அந்த வகையில் பிரபல இயக்குனர் செல்வராகவன் புஷ்பா படத்தை பார்த்து தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். என்ன ஒரு அருமையான படம், தேவி ஸ்ரீ பிரசாத் இசைக்கு நான் அடிமை ஆகிவிட்டேன், அல்லு அர்ஜுன் மிக சிறப்பாக நடித்துள்ளார். புஷ்பா குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.