Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் மீண்டும் களைகட்டும் விலங்குகள் இறைச்சி - கழுவி ஊற்றிய பாலிவுட் நடிகை!

Webdunia
வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (11:45 IST)
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வீட்டில் முடங்கியிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸை தொற்றிலிருந்து ஒருவரை ஒருவர் பாதுகாத்துக்கொள்ள விழிப்புணர்வுடனும் பாதுகாப்புடனும் இருந்து வருகின்றனர்.

ஆனால், தற்போது இந்த நோய் உருவான இடமான சீனா இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. மக்களும் வீடுகள் விட்டு வெளியே வந்து தங்களது வேலைகளில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் மீண்டும் விலங்குகள் இறைச்சி கடைகளில் வவ்வால்கள், பாம்பு, எட்டுக்கால்பூச்சி, பல்லி, தேள் ஆகியவற்றின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.  மேலும் அங்குள்ள விற்பனையாளர்கள் இதையெல்லாம் சாப்பிட்டால் கொரோனா தடுக்கலாம் என கூறி விளம்பரம் செய்து விற்கின்றனர்.


இதனை கண்டு பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா தாஸ் அவர்களை கெட்ட வார்த்தையால் மோசமாக திட்டியதுடன் கொரோனா வைரஸ் வந்த பிறகும் உங்களுக்குப் புத்தி இல்லையா? மானங்கெட்டவங்களா எதைத்தான் விட்டுவைப்பீர்கள். என கடுமையாக திட்டி விற்பனை செய்யும் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments