Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமனிதன் ரிலீஸ்… மறைந்த தலைவர்களுக்கு இயக்குனர் சீனுராமசாமி மரியாதை

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (09:19 IST)
சீனுராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு அடுத்து மாமனிதன் படம் உருவாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டே முடிந்தது. ஆனால் இன்னமும் ரிலிஸ் ஆகாமல் உள்ளது. இந்த படத்தைத் தயாரித்துள்ள யுவன் ஷங்கர் ராஜா இப்போது ரிலிஸுக்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் சேர்ந்து இசையமைத்துள்ளனர்.

இந்த படத்தின் தமிழக மற்றும் கேரள திரையரங்க விநியோக உரிமையை முன்னணி தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் வாங்கியுள்ளார். சில முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் பின்னர் மாற்றப்பட்டது. கடைசியாக ஜூன் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரிலீஸ் வேலைகளைப் படக்குழு தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் மூத்த தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செய்து அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அவரது டிவீட்டில் “திரைப்படத்தின் வருகையையொட்டி என் கலை உணர்ச்சியின் தூண்டாமணி விளக்குகள், தமிழ்ச்சினிமாவின் மாமனிதர்கள் முத்தழிழ் அறிஞர் கலைஞர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இம்மூவருக்கும் மலர் மரியாதை செய்தேன்.” என பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments