Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“சிறு பட்ஜெட் படங்களையும் வெளியிட வேண்டும்”…. உதயநிதிக்கு கோரிக்கை வைத்த இயக்குனர்!

Webdunia
திங்கள், 23 மே 2022 (09:01 IST)
இயக்குனர் சீனு ராமசாமி நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பரவலாக பாராட்டுகளைக் குவித்து வருகிறது. இதையடுத்து திரையுலகைச் சேர்ந்தவர்கள் சிலரும் படத்தைப் பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் இயக்குனர் சீனு ராமசாமி படத்தைப் பாராட்டி பதிவிட்டுள்ள டிவீட் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

அதில் “கண்ணே கலைமானே படத்தின் சமயத்தில் உதயநிதி அவர்களை மக்கள் அன்பன் என அழைத்தேன் அதை மெய்பிக்கும் விதமாக சிறப்பாக இருந்து நெஞ்சுக்கு நீதி அன்று நான் சொன்னது போல  இதுபோன்ற கதை கருத்தாழமிக்க மக்களிடையே வாழும் படங்களில்  நடித்தால் கலையும் எதிர்கால முற்போக்கு கருத்துலகமும் கைவிடாது.

அது போல வெளிவர முடியாமல் தவிக்கும் கதையம்சம் நிறைந்த சிறுபட்ஜெட் படங்களை வாங்கி ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டால் அதில் உயிராகும் நடிகர்கள் இயக்குனர்கள் புதிய கலைஞர்கள் நன்றியோடு உங்களை என்றும் மறவாது வாழ்த்துவர். இப்பெருமையினை சொல்லி மகிழம் தருணத்தை எதிர்நோக்கி.... வாழ்த்துகள்.” எனக் கூறியுள்ளார். சமீபகாலமாக உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ரெட்ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் சார்பாக பல முன்னணி நடிகர்களின் படங்களை வெளியிட்டு வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments