ஜி வி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இடிமுழக்கம் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த அந்த படம் ரிலீஸாகவில்லை. இதையடுத்து அவர் புதுமுக நடிகர் ஏகன் நடிக்கும் கோழிப்பன்னை செல்லதுரை என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் பிரிகிடா சஹா கதாநாயகியாக நடிக்க யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். அந்த படம் செப்டம்பர் மாதம் ரிலீஸாகி தோல்விப் படமாக அமைந்தது.
இதையடுத்து தற்போது ஓடிடியில் வெளியாகி சிறிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் அது பற்றி பேசியுள்ள சீனு ராமசாமி “கோழிப்பண்ணை செல்லத்துரை ரிலீஸான நாளில் 8 படங்கள் ரிலீஸான நிலையில் போதுமான தியேட்டர் மற்றும் காட்சிகள் கிடைக்கவில்லை. இப்போது ஓடிடியில் ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
என்னுடைய இடிமுழக்கம் படத்தின் ரிலீஸ் வேலைகள் நடக்கின்றன. என்னுடைய அடுத்த படம் ஜனவரியில் தொடங்கும். அது கிராமத்துப் பின்னணி சார்ந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகவுள்ளது” எனக் கூறியுள்ளார்.